MBBS,BDS, BVMS படிப்புக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம்

நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நீட் நுழைவுத்தேர்வினை 5749 பேர் எழுதினர். இதில் 2899 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து தேசிய தேர்வு முகமையிடமிருந்து நீட் தேர்ச்சிக்கான புதுச்சேரி மாநில பட்டியலைப் பெற மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, MBBS,BDS, BVMS உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு, தனியார் நிர்வாக ஒதுக்கீடு,வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://www.centacpuducherry.in/  என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version