தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.க. தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ படிப்பு
அரசுப் பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் அளித்திருப்பது, நல்ல பலன்களை அடைந்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம்
தையல் தொழிலாளியின் மகன், பெயிண்டருடைய மகள், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகள் போன்றோர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயைச் செலுத்தும் நிலையில் இல்லாத ஒரு சூழலில், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்புக் கிட்டியும் இவ்வளவு பெருந்தொகையைச் செலுத்தும் நிலையில் இல்லை.
நிதியுதவி
இந்த சோகத்திலிருந்து இவர்களை மீட்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு உதவிட தமிழக அரசு முன்வரவேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,