நீட் தேர்வு முடிவுகள்

நீட் தேர்வில் முதல் 100 இடத்தில் ஆறு இடத்தை தமிழ்நாட்டைச் சேரந்த மாணாக்கர்கள் பெற்றுள்ளனர்.

மருத்துவ இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு 22.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 22 லட்சத்து ஒன்பதாயிரத்து ,318பேர் தேர்வு எழுதினர். ஆறாயிரத்து 6751 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 9.65 லட்சம் பேரும், மாணவியர் 1.31 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 158 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஒரு லட்சத்து 35,715 பேர் தேர்வு எழுதினர். 76,181 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்பவர் அகில இந்திய அளவில் 27வது இடமும், தமிழகத்தில் முதல் இடமும் பெற்றுள்ளார்.

Exit mobile version