9 ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு, கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 9 ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
9ஆம் வகுப்பிற்கு 50% வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து, 9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.