சந்தேகங்களை தீர்த்து வையுங்களேன்?புதிய கல்விக்கொள்கை குறித்து-சரத்குமார்

புதிய கல்விக்கொள்கையில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை 2020’ல் வரவேற்கத்தக்க திட்டங்கள் இருந்தாலும், முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் மேலோங்கி நிற்கிறது. 6 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி கல்விக்கு செலவிடப்படும் என்ற புதிய கல்வி கொள்கை அறிவிப்பு வரவேற்புக்குரியது என்றாலும், கல்விக்கூடங்களுக்கு அடிப்படை தேவைகளான கட்டடங்கள் வசதி, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரம் பேணல், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் போன்றவை அமைத்து கல்வி நிலையங்களை தரமாக கட்டமைக்க இந்த நிதியில் முன்னுரிமை அளிக்கப்படுமா? என்பதை மத்திய கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்வதால் தேசிய கல்வி கொள்கையின் அவசியம் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மூன்றாவது மொழித்தேர்வை மாணவ – மாணவியர்களின் விருப்பத்திற்கு விடாமல், சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை தந்து பலமுறை அழுத்தி சொல்லியிருப்பது ஏற்புடையதாக இல்லை. இந்த கல்வி கொள்கை உயர்கல்வியில் இடைநின்று, மீண்டும் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதில் பலதரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களையும், நடைமுறை சாத்தியக்கூறுகளையும், ஐயப்பாடுகளையும் மத்திய அமைச்சகம் களைந்த பின்னர் செயல்படுத்துவது நன்மை பயக்கும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version