கேரளா,கர்நாடகம்,அசாம் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் அனுமதி

கேரளா,கர்நாடகம், அசாம் மாநிலங்களில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.

திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. என்றாலும் அங்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடந்த வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது. குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2- மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதற்காக 1-ந் தேதியான இன்றே அரசு பள்ளிகளை திறக்க முடிவு கல்விதுறை முடிவு செய்தது.

அனைத்து வகுப்புகளிலும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. பிளஸ் -2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். பொதுதேர்வை எதிர்கொள்வது, தேர்வுக்கு தயாராவது குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்து கூறினர். அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ஒன்பது மாதங்களுக்கும் பிறகு பள்ளிகள் இன்று திருவனந்தபுரத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.”இவ்வளவு காலத்திற்குப் பிறகு மாணவர்களைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் & மற்ற அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன” என்று ஒரு ஆசிரியர் தெரிவித்தார்.

Read more – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் நடராஜன்

கிருமிநாசினி தெளித்தும் பள்ளி வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு இருந்தது. மேலும் முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். அசாம் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று  திறக்கப்பட்டது.  அசாம் மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், பி.யூ.கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் வகுப்புகள் நடக்காமல் இருந்தது. இதன் காரணமாக வகுப்பறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Exit mobile version