எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளை கவுரவிக்க நடிகர் விஜய் விரும்பி அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தார்.இதனைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த 1,500 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விழாவில் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அத்துடன் சிறப்பு பரிசாக ஒரு வைர நெக்லஸ் மற்றும் கல்வி உதவித் தொகையாக ரூ.2½ லட்சமும் ரொக்கமாக வழங்கப்பட்டது. அந்த வைர நெக்லசை நந்தினிக்கு, அவரது தாயாரே மேடையில் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன், தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையையும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் புதிய முயற்சி அசத்தலான விருது வழங்கும் விழா
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025