10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் பொதுத்தேர்வுகள் நடப்பாண்டு நடைபெறுமா? என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஆய்வு
கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மாணவர்களுக்கு எவ்வாறு பாடத்திட்டத்தை முடிப்பது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வுகள் நடக்குமா?
10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்கலாமா? அல்லது கடந்த ஆண்டைப் போல அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் எடுக்கப்படும்..
இவ்வாறு அவர் கூறினார்.
