சர்வதேச சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை வென்ற Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி

Global Asian Achievers council ( Gaac) எனும் சர்வதேச அமைப்பின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை, Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்று அசத்தினார்.

Global achievers council சார்பில் சுற்றுலா மற்றும் தொழிலில் சிறந்து விளங்கோருக்கான சர்வதேச விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் மலேசியா மற்றும் சர்வதேச தொழில் பிரிவு தலைவர் அப்துல் சையத், ஆக்ஸ்போர்ட் பல்கலை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துக்கிருஷ்ணன், இலங்கையின் சர்வதேச தொழில் பிரிவு தலைவர் Dr.M.A.C. மாசூம் , இலங்கை மற்றும் மலேசியாவின் தொழில்துறை தலைவரும் சர்வதேச Gaac தொழில் இயக்குனருமான Dr.P.M.M ரமீஸ் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களை இலங்கை சேர்ந்த Gaac நிறுவனரும், incruises டூரிசம் பங்குதாரரும் சர்வதேச மனிதநேய மிஷன் தலைவருமான சிலோன் அமீர்கான் வரவேற்றார்.

சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர் சிறந்த கேமராமேன் சிறந்த சமூக சேவகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளங்கிய 52 பேருக்கு விழாவில் விருது வழங்கப்பட்டது. விருதுகளை சிறப்பு விருந்தினர்களான நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ், நடிகர் செந்தில் ,நடிகர் ஆகாஷ் ஆகியோர் வழங்கினர்.

மேலும், லண்டன்,பிரான்ஸ், கனடா தொழில் பிரிவு இயக்குனரும், நகைக்கடைகளின் தலைவருமான லயன் M. குமரலிங்கமும், மலேசியாவின் Gaac மேலாண்மை இயக்குனருமான Dr. தத்துவம் தனவதி சித்ராவும் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். N.A. திருமுருகனும் பீர்முகமதுவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

நிகழ்ச்சிக்கு, மேலும் அழகு சேர்க்கும் விதமாக, ஸ்ரேயா குளோபல் அகாடமி நிறுவனரும், பிரபல கல்வியாளரும், மனநல சிகிச்சை நிபுணரும், திருமதி உலக அழகி பட்டங்களை தட்டி வந்தவருமான Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு சர்வதேச பெண் தொழில் முனைவோருக்கான விருதை, சிறப்பு விருந்தினர்களான நடிகர் பாக்யராஜ், செந்தில் மற்றும் Gaac நிறுவனர் சிலோன் அமீர்கான் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி, “இந்த விருதுக்கு தன்னை பரிந்துரைத்த நண்பரும், KSJ சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனரும், சென்னை திருமண மண்டப ஓனர் அசோசியேஷன் பொருளாளரும், தென் சென்னை நிருபர்களின் ஒருங்கிணைப்பாளருமான ஜெய்க்கு நன்றி தெரிவித்தார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்து சிறந்த சர்வதேச தொழில் முனைவோருக்கான விருது பெறுவதில் மகிழ்ச்சி என்ற அவர், பெண்ணாக வீடு, அலுவலகம் என இரட்டை சவாரி செய்வது கடினம் என்றார்.

அதிலும் கல்வியாளர், யோகா பயிற்றுனர், மன நல சிகிச்சை நிபுணர் , மாடல், எழுத்தாளர் என எப்போதும் பிசியாக இருக்கும் நிலையிலும், அனைத்தையும் திறம்பட கவனிக்க காரணம் அன்பு கணவர் சீனிவாச ராவும், மகள்கள் Dr. ஸ்ரேயா மற்றும் சரிகாவும் தான். திருமதி இந்தியா, திருமதி இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் பட்டத்தை வென்றேன் இதே போட்டியில் கிளாமர் அச்சீவர் என்ற துணை பிரிவிலும் பட்டத்தை வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது 2022 ல் அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் வென்றதுடன், இந்தாண்டுக்கான Mrs.Asia Pacific International பட்டத்தையும் வென்றேன்.

தற்போது பாரிஸ் பேஷன் வீக்-கில் International Signature Runway மாடலாக கலந்து கொள்வது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களான நடிகர் பாக்யராஜுக்கும் செந்திலுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவர்களை வாழ்த்தி பேசியது உற்சாகம் அளிப்பதாக நெகிழ்ந்தார்.

Exit mobile version