வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

2019-ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் 65 லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. சமீப மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போது கொரோனா பரவல் தாக்கல் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்றும், இந்த பரவல் மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு கூட இட்டு செல்லலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு தகுந்த எதிர்ப்பார்புகளுடன் இருந்தாலும் பரிசோதனையில் ஏற்பட்டுள்ள தொய்வும் கண்காணிப்பில் வெளிப்படும் அலட்சியமும், உரிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பதாகவும், கொரோனா பரவல் அதிகரிக்கும் சீனாவுக்கு அவற்றை கட்டுப்படுத்தும் பொறுப்புடன் மனித உரிமையையும் பேன வேண்டிய கடமை இருப்பதாக கூறினார்.
லட்ச கணக்கானோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் நிலையில் குளிர் பிரதேச நாடுகளில் பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. குளிர்காலங்களில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளூடன் கொரோனா பாதிக்கும் போது அதன் மரணத்தை ஏற்படுத்தாலம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version