ஆந்திராவின் மேலும் 6 மாவட்டங்களில் ஆரோக்யஸ்ரீ திட்டம்

ஆந்திராவில் ரூ.1000 க்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான ஆரோக்யஸ்ரீ திட்டத்தை மேலும் 6 மாவட்டங்களில் செயல்படுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் மருத்துவ சேவை தொடர்பாக ஆரோக்யஸ்ரீ என்னும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் துவக்கினார். ஒரு பைலட் திட்டமாக மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஜன.,3 ல் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ (YSR Aarogyasri scheme) திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 க்கு அதிகமான மருத்துவ செலவுகள் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்படும். இந்நிலையில் ஆந்திராவின் ததே பள்ளியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்து. அப்போது அவர் இது தொடர்பாக முதல்வர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஜூலை 16 முதல் ஆந்திராவின் கடப்பா, கர்னூல், பிரகாசம், குண்டூர், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கீழ் மருத்துவ நடைமுறைகளின் (நோய்களின்) எண்ணிக்கை 1,059 ல் இருந்து 2,059 ஆகவும், அடுத்ததாக 2,146 ஆகவும் உயர்த்தப்பட்டது. புற்றுநோய் தொடர்பான 54 மருத்துவ நடைமுறைகள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 2,200 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார சேவைகளை மறு சீரமைப்பதை தவிர, முந்தைய தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில், என்.டி.ஆர்.உட்சிதா வைத்யா சேவாவின் இலவச சுகாதாரத் திட்டத்தின் கீழ் 1,059 மருத்துவ நடைமுறைகள் தான் உள்ளடக்கப்பட்டன. ஜூன் 2019 முதல், ஆரோக்யஸ்ரீ திட்டத்திற்கு ரூ. 1815 கோடியும், பணியாளர் சுகாதார திட்டத்திற்கு ரூ 315 கோடியும் பயன்படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version