சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்கக்கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் பெரும் சரிவை சந்துத்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், வரும் அக்டோபர் மாதம் வரையில் பிணையில்லாமல் கடன் வழங்க மத்திய அரசு சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை ஒத்துக்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அப்போது பேசியவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தவே மத்திய அரசு சிறப்பு கடனுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே வங்கிகள் கடன் வழங்க மறுக்கக் கூடாது. இதுதொடர்பாக புகார் அளித்தல், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் தாமே அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வேன் எனவும் தெரிவித்தார்.
மருத்துவ பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைப்பது தொடர்பாக, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் முடிவு எடுக்கும் என்றார். மேலும், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் கடன்களுக்கான தவணையை செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்கவும், அவற்றிற்கான கடன்களை மறுசீரமைக்கவும் ரிசர்வ் வங்கிகியுடன், நிதியமைச்சகம் தொடர்ந்து பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.