அமெரிக்காவிடமிருந்து 72,000 சிக் 716 ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுக்க உள்ளது.
ஏற்கனவே இந்தியா அமெரிக்காவிடமிருந்து 72,000 சிக் 716 ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்கியுள்ளது. இந்த துப்பாக்கிகள் ராணுவத்தின் வடக்குப் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எல்லைப்பிரச்னை காரணமாக லடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா மேலும் 72,000 இயந்திர துப்பாக்கிகளை வாங்க அமெரிக்காவிடம் ஆர்டர் கொடுக்க முடிவு எடுத்துள்ளது.
இந்த துப்பாக்கிகள் விரைவான கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட உள்ளன. இவ்வகை துப்பாக்கிகள் கையிருப்பில் உள்ள சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக வாங்கப்பட உள்ளன. இந்தத் துப்பாக்கிகள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும், எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. சமீபத்தில் இஸ்ரேலிடம் 16,000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளுக்கும் இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்தது.