SeithiAlai

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆக உள்ளது.

மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் நேற்று, அதிக தொற்று உறுதியானதால் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு புது உச்சத்தை அடைந்தது.

Exit mobile version