மகாராஷ்டிராவில் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுத்தேர்வுக்கான அட்டவணையை மாநில கல்விஅமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதேபோல் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் கோவிட்-19 வழிகாட்டுதல்களின் படி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஒருவேளை தேர்வின் போது மாணவர்கள் தனிமைப்படுத்தப்படும் சூழல் இருந்தால், அவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மறுதேர்வு நடத்தப்படும். பின்னர் ஜூலை கடைசி வாரத்தில் 12ஆம் வகுப்பிற்கும், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் 10ஆம் வகுப்பிற்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதியிலேயே மற்ற மாநிலங்களுக்கும் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.