இந்தியாவில் காய்ச்சல், நோய் எதிர்ப்புக்கான 23 மருந்துகள் போலியானவை..பொதுமக்கள் உஷார்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும், மருந்துகளில் 23 வகைகள் போலியானவை என தர ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அன்றாட பயன்பாட்டிற்கான பொருட்கள் மட்டுமின்றி, மருந்துப் பொருட்களுக்கும் கூட இந்தியா மிகப்பெரும் சந்தையாக உள்ளது. இதன் காரணமாகவே, பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் கூட இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரமற்றவை என பல நாடுகள் தடை செய்த மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்துவருகின்றன. அதன்படி, கடந்த மாதத்தில் 843 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 821 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா தொற்று தடுப்புக்கு பயன்படுத்தப்படும் 22 மருந்துகளும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள் சிலவும் தரமற்றதாக தெரிய வந்துள்ளது. இதில், பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தமருந்துகளின் விவரம் https://cdsco.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Exit mobile version