கோடிஸ்வரனாகிய கோவில் ஊழியர்..லாட்டரியில் கிடைத்த பல கோடி ரூபாய்

கேரள மாநிலத்தில் 24 வயது இளைஞருக்கு, 12 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசாக விழுந்துள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை சட்ட விரோதமானது என அரசு அதற்கு நிரந்தரமாக தடை விதித்து உள்ளது. அதேசமயம், அண்டைமாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கேரள அரசின் திருவோண லாட்டரி விற்பனை தற்போது நடந்து முடிந்தது. இதற்கான குலுக்கல் இருதினங்களுக்கு முன்பாக திருவனந்தபுரத்தில் நடந்தது.

இதில் திருவோணம் பம்பர் பரிசான 12 கோடி ரூபாயை அனந்து விஜயன் (24). என்ற இளைஞர் வென்றுள்ளார். இவர் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் உள்ள ஏலம்குளம் கோயிலில் பணிபுரிந்து வருகிறார்.

பரிசுத் தொகையான ரூ.12 கோடியில் 10 சதவீதம் ஏஜென்சி கமிஷன் மற்றும் 30 சதவீத வருமான வரியை கழித்தால் கூட, அனந்து விஜயனுக்கு ரூ7.56 கோடி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லாட்டரியில் அடித்த ஜாக்பாட்டால் கோடீஸ்வரனாகிய அனந்து விஜயன் தற்போது மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.

Exit mobile version