SeithiAlai

சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கிய 3 மாடி கட்டிடம்.. பகீர் வீடியோ!

கர்நாடகாவில் பழைய 3 மாடி கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

building collapse

பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்று கடந்த 3 ஆண்டுகளாகவே சற்றே சரிந்து பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. இதில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளிகள் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று லேசாக ஆடிய அந்த கட்டிடம் சரசரவென சரிந்து விழுந்தது. நல்ல வேலையாக தெருவிலோ, கட்டிடத்திற்குள்ளோ மக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

கட்டிடத்தின் நிலை குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அனைவரையும் தக்க சமயத்தில் வெளியேற்றி உயிர் காத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Exit mobile version