சபரிமலையில் நாளை முதல் 5000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி : திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலையில் நாளை முதல் 5000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை:

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவருகிறது.கேரளா அரசின் உத்தரவின் பெயரில் கடந்த 2 வார காலமாக சபரிமலையில் தரிசனத்திற்காக பக்தர்கள் வார நாட்களில் 2 ஆயிரம் நபர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் நபர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம்,அவ்வாறு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்க படாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐயப்ப சாமியை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும்,ஆன்லைனில் முன்பதிவு செய்யாத ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய படை எடுத்து வருவதாலும் அவர்கள் அனைவரையும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர்.இதையடுத்து சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம், காங்கிரஸ் தலைவர் அஜய் தரப்பிலும் கேரள நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் சபரிமலை சாமி தரிசனத்துக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.இதையடுத்து நாளை(டிசம்பர்.20)முதல் முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகள் இல்லை என்றும்,முகக்கவசம் அணிதல், கொரோனா இல்லா நெகட்டிவ் சான்றிதழ், சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை உள்ளிட்ட அனைத்தும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more-ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை :அமைச்சர் செங்கோட்டையன்

வருகிற 16 ம் தேதி அன்று சபரிமலையில் மண்டல பூஜை நடப்பதையொட்டி அதற்கு முந்தைய இரவு 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version