உத்தரகண்ட் மழை வெள்ளத்தில் சிக்கி 79 பேர் உயிரிழப்பு!!

உத்தரகண்ட் மழை வெள்ளத்தில் சிக்கி 79 பேர் உயிரிழப்பு;3 பேரை காணவில்லை.

டெல்லி, உத்தரகண்ட் மாநிலத்தில் அல்மோரா, சம்பவத், பாகேஷ்வர், நைனிடால், யு.எஸ்.நகர், பவுரி, பித்தோராகர், சாமோலி மற்றும் உத்தர்காஷி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் ( கன மழை,நிலச்சரிவு,வெள்ளம் ) காரணமாக இதுவரை 79 பேர் உயிரிழந்து உள்ளதாக மாநில அரசு சார்ப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த 17-19 ஆகிய தேதிகளில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி பலர் புதைந்தனர்.

இந்நிலையில், மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் குழு மேற்கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில், இன்று வரை மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 79 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 27பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இதுவரை 3 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 232 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு சார்ப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், வீடுகளை இழந்த மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version