உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதான இளம் பெண் பணியாற்ற இருக்கிறார்.
உத்தரகாண்ட் :
இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினமானது நாளை (ஜனவரி 24 ) நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஸ்ருஷ்டி கோஸ்வாமி அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்ற இருக்கிறார்.
ஒருநாள் முதல்வராக ஸ்ருஷ்டி கோஸ்வாமி பணியாற்றும்போது அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும், ஸ்ருஷ்டி கோஸ்வாமி ஏற்கனவே குழந்தைகளுக்கான மாநில சட்டமன்றத்தின் முதல்வராக இருந்து வருகிறார்.
Read more – குளிர்காலத்தில் வீடற்றவர்கள் பயன்படுத்த “உல்மர் குடில்கள்” : ஜெர்மனியில் புதிய ஏற்பாடு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் ஒருநாள் முதல்வராக பணியாற்ற இருக்கும் ஸ்ருஷ்டி கோஸ்வாமி இதுகுறித்து கூறியதாவது: இது உண்மையா என்று என்னால் இதுவரை நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், மக்கள் நலனுக்காக உழைக்கும்போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்து முடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.