மத்தியபிரேதசத்தில் 60 மணிநேர முழு ஊரடங்கு… அமலாகிறது இன்று மாலை 6 மணி முதல்…

கொரோனா பரவல் காரணமாக மத்தியபிரேதச மாநிலத்தில் 60 மணிநேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த தொற்றினை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மத்தியபிரேதசத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழப்பும் 13 ஆக உயர்ந்தது. இதையடுத்து, அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையில் நேற்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Read more – இன்றைய ராசிபலன் 09.04.2021!!!

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் சிவராஜ் சவுகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியபிரேதச மாநிலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த அணைத்து பகுதிகளிலும் 60 மணிநேர முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில். இன்று(ஏப்ரல்.9) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 12 ம் தேதி காலை 6 மணிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version