நடுவானில் 7 வயது சிறுமிக்கு மூச்சு திணறல் : விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போதிலும் நேர்ந்த சோகம்

விமானத்தில் நேற்று முன்தினம் லக்னோவில் இருந்து மும்பைக்கு 7 வயது சிறுமி பயணித்தபோது தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Dead woman lying on the floor under white cloth with focus on hand

லக்னோ:

உத்தர பிரதேசம் லக்னோவில் இருந்து மும்பைக்கு கோ ஏர் விமானத்தில் நேற்று முன்தினம் ஆயுஷி என்ற 7 வயது சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். கோ ஏர் விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே ஆயுஷிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. ஆயுஷியை அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர்கள் விரிவான அறிக்கை வெளியிட்டு கூறியதாவது : ரத்தத்தில் ஒருவருக்கு சராசரியாக 12 கிராம் அளவிற்கு ஹிமோகுளோபின் இருக்க வேண்டும். 10 கிராமிற்கு குறைவாக ஹிமோகுளோபின் இருந்தால் அது ரத்த சோகையாக கணக்கிடப்படும்.

Read more – இன்றைய ராசிபலன் 21.01.2021!!!

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு விமான பயணத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் . இதனால் தான் இந்த குறைபாடு உள்ளவர்களை விமான நிறுவனங்கள் பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக, ஆயுஷிக்கு 2.5 கிராம் என்ற மிக மோசமான ஹிமோகுளோபின் குறைபாடு இருந்துள்ளதே அவரது உயிரிழப்புக்கு மிக முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version