டெல்லியில் 6 நாள் ஊரடங்கு எதிரொலி… மது வாங்க டாஸ்மாக்கில் அடிதடி…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடந்து நேற்று டாஸ்மாக்கில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் மது பாட்டில்களை வாங்க முட்டிமோதியது. மேலும், பல மணிநேரம் வெயில் என்று பாராமல் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Read more – மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

ஒரு சிலர் 8 முதல் 10 பாட்டில்களை வரையும் தாங்கள் கொண்டு வந்த பேக்கில் வாங்கி குவித்து கொண்டும், இருமடங்கு விலை கொடுத்து வாங்கியும் அள்ளி சென்றனர். மேலும், ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதால் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version