கர்நாடகாவில் இன்று முதல் அமலாகும் 14 நாட்கள் முழு ஊரடங்கு… எடியூரப்பாவின் திட்டம் பலிக்குமா ?

கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில், கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் ஒரு நாள் பாதிப்பு நேற்று முன்தினம் 20 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவில் கடந்த 10 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்ட நிலையில், கர்நாடகத்தில் இன்று இரவு 9 மணி முதல் மே மாதம் 11 ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more – மத்திய பிரதேஷத்தில் பிபிஇ பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்த தம்பதியினர்… அக்னி முன்பு ஆசீர்வாதம்…

மேலும், காலை 10 மணிக்கு பிறகு கட்டுமான, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அரசு அனுமதி வழங்கியுள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அடையாள அட்டைகளை காண்பித்து பணிக்கு செல்லலாம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு மேற்கொண்ட நடவடிக்கைள் கைகூடுமா என்றும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் திட்டம் நிறைவேறுமா என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Exit mobile version