பிரசவ வலியால் துடித்த இளம்பெண் : ராணுவ வாகனத்தில் நடந்த சுகப்பிரசவம்

காஷ்மீரில் கடும் குளிரில் அவசரத்திற்காக ராணுவ வாகனத்தில் சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு சுகப்பிரசத்தில் குழந்தை பிறந்துள்ளது.

காஷ்மீர் :

காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குப்வாரா மாவட்டத்தில் நரிகூட் பகுதியில் திடீரென கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

கடுமையான பனிபெய்து சாலை போக்குவரத்து முடங்கி உள்ளதால் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதனால், உடனிருந்த சாதியா பேகம் என்ற சுகாதார பணியாளர் உடனடியாக இந்திய ராணுவத்தின் கலரூஸ் கம்பெனி படை பிரிவுக்கு கால் செய்து தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையறிந்து விரைந்த ராணுவ படையினர் மருத்துவ குழு ஒன்றையும் உடன் அழைத்து சென்றுள்ளது. மருத்துவனையில் அனுமதிப்பதற்காக கர்ப்பிணி பெண்ணுடன் சுகாதார பணியாளரையும் உடன் அழைத்து கொண்டு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் வழியில் அந்த பெண்ணிற்கு உடல் நிலை மோசமானது.

Read more – தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார் மு.க.ஸ்டாலின் : செல்லூர் ராஜு

நிலைமையை அறிந்து வண்டியை ஓரமாக நிறுத்த, மருத்துவ குழு உதவியுடன் ராணுவ வாகனத்தில் பெண்ணுக்கு சுகாதார பணியாளர் பேகம் பிரசவம் பார்த்துள்ளார். அப்பொழுது அந்த பெண்ணிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரச காலத்தில் துரிதமாக செயல்பட்ட சுகாதார பணியாளர் பேகத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் ராணுவ கம்பெனி படை பிரிவின் தளபதி பாராட்டுகளை தெரிவித்தார்.

Exit mobile version