அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு சாமியார் ஒருவர் 1 கோடி நன்கொடையாக அளித்தது அனைவரது மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
அயோத்தி :
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 2019 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி கோவில் கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். இந்தநிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடுமுழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பல முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் கடந்த 60 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்து ரூபாய் 1 கோடி நன்கொடை வழங்க தீர்மானித்து அவரது வங்கியை தொடர்பு கொண்டு பெற்றார். இதை தொடர்ந்து நிதி திரட்டும் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு இதற்கான காசோலையை வழங்கினார். ரூபாய் 1 கோடி நன்கொடை வழங்கிய அந்த சாமியாரை கண்டு வங்கி ஊழியர்கள் முதற்கொண்டு இவரது வங்கி கணக்கில் இவ்வளவு பணமா என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.
Read more – மியான்மரில் தொடரும் பதட்டம் : ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது ராணுவம்
இதுகுறித்து 60 ஆண்டுகளாக குகையில் வாழும் சுவாமி சங்கர் தாஸ் கூறுகையில், நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குகையில் வசித்து வருகிறேன். என்னை காண வருகை தரும் பக்தர்கள் எனக்கு தரும் நன்கொடைகளில் நான் வாழ்கிறேன். ராமர் கோயிலுக்கான எனது சேமிப்பு தொகையை நன்கொடையாக வழங்க முடிவு எடுத்துட்டு இதை வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.