விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மதகுரு உயிர்த்தியாகம் : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு உயிர்த்தியாகம் செய்துகொண்டார்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 22 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த போராட்டத்தினை நாடுமுழுவதும் தீவிர படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,விவசாய போராட்டத்தில் 40 க்கும் அதிகமான விவசாய அமைப்பினர்கள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில்,ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சந்த் பாபா ராம் சிங் ( 65) என்ற சீக்கிய மதகுரு சிங்கு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் ஆதரவாக கலந்துகொண்டு அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னெடுத்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவத்தால் விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Read more-ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சந்த் பாபா ராம் சிங் எழுதிய கடிதம் ஒன்றில்,விவசாயிகளின் அவலத்தை என்னால் தாங்க முடியவில்லை,அரசாங்கத்தின் இந்த அநீதிக்கு எதிராக கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்தவே தனது உயிரைத் தியாகம் செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.மேலும்,அநீதியை ஏற்படுத்துவது ஒரு பாவம், ஆனால் அநீதியை பொறுத்துக்கொள்வதும் ஒரு பாவமாகும்.விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சில தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்கிறார்கள் ஆனால் என்னிடம் உயிர் மட்டுமே உள்ளதால் அதை இங்கு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அளிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீக்கிய மதகுருவின் இந்த உயிர்தியாகத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Exit mobile version