டெல்லி விவசாய போராட்டம் : 7 ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி, கொட்டும் மழையில் அவதிப்படும் விவசாயிகள்

மத்திய அரசுடன் நடத்த 7 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் கடந்த 30 ம் தேதி விவசாய அமைப்பினருடன் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுக்கு 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனர். அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர நேற்று நடந் 7 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த யுது வீர்சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

சட்ட விதிகள் வாரியாக விவாதிக்க வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் தெரிவிக்கிறார். நாங்கள் நிராகரித்து சட்டரீதியாக விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்கில் செயல்படுகிறது. இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

7 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி முடிந்த நிலையில், ஜனவரி 8 ம் தேதி மீண்டும் விவசாய அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளனர்.

Read more – கேரளாவிலும் பறவை காய்ச்சலின் ஆதிக்க நடை .. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவர தடை..

இந்தநிலையில், டெல்லி ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடங்களில் ஒன்றான சிங்கு பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் அவர்களின் தற்காலிக கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்து தவித்து வருகின்றனர்.

Exit mobile version