வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை மியா கலீபா டுவீட் செய்துள்ளார்.
டெல்லி :
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். மத்திய அரசுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், நடிகை மியா கலீபாவும் ஆதரவாக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது?” “என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? நான் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கின்றேன் என மியா கலீபா டுவீட் செய்துள்ளார். ‘சம்பளத்திற்கு நடிப்பவர்களா? இவர்கள் இந்த அவார்ட் சீசனில் கவனிக்கப்படமாட்டார்கள். நான் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.