கல்லூரி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் தேதியை அறிவித்தது மத்திய அரசு..

கொரோனா பரவலை தொடர்ந்து டுமார் 5 மாதங்களுக்குள் 7 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகளை தொடங்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். என்பதோடு, கல்லுரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்க அட்டவணை வெளியிட்டுள்ளது.

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கலாம் என  கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அதைதொடரந்து, முதல் செமஸ்டருக்கான தேர்வு , அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி தொடங்கி, 26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்குவதால் ஒரு வார காலம் மட்டுமே செமஸ்டர் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைதொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்காண இரண்டாவது செமஸ்டருக்கான வகுப்புகள் ஏப்ரல் 5ம் தேதி தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி 21ம் தேதி தேர்வுகள் முடிவடையும் என்றும், கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Exit mobile version