இந்தியாவுடன் மோதுவது சீனாவுக்கு நல்லதல்ல : விமானப்படை தளபதி எச்சரிக்கை

இந்தியாவுடன் மோதுவது சீனாவுக்கு நல்லதல்ல என்று விமானப்படை தளபதி கே.எஸ்.பதாரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா நேற்று இணையவழி கருத்தரங்கில் தேசப் பாதுகாப்பு சவால்கள் மற்றும் விமானப்படையின் பலம் என்ற தலைப்பில் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இந்தியாவுடன் மோதுவது சீனாவுக்கு நல்லதல்ல, இந்தியா மற்றும் சீனா இடையிலான எந்த ஒரு தீவிரமான மோதலும் மிக பெரிய அழிவை உருவாகும். சீனாவின் விருப்பங்கள் என்பது அதுவே என்றால் அது அந்த நாட்டின் திட்டங்களுக்கு உகந்தது அல்ல.

Read more – நாட்டில் இளைஞர்கள் வேலையின்மையால் தவித்து வருகின்றனர் : மோடியின் ஆட்சி குறித்து ராகுல் காந்தி பேச்சு

வடக்கில் சீனாவின் திட்டம் என்னவாக இருக்கிறது? அவர்கள் அங்கு சாதித்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். எல்லையில் அதிகளவில் சீனா படைகளை குவித்து இருக்கிறது. அதற்கு எதிராக நாமும் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version