விவசாயிகளின் நிலத்தை ஒருபோதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிக்க முடியாது : அமித்‌ஷா திட்டவட்டம்

விவசாயிகளின் நிலத்தை ஒருபோதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிக்க முடியாது என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

புதிய வேளாண் மசோதா சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகள் சிக்க வேண்டிய நிலை வரும் என்றும், விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக்கொண்டு விடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் தோன்றுகிறது. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது.கடும் குளிரையும் பாராமல் இரவு பகலாக மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதா சட்டங்களை ரத்து செய்ய குரல் எழுப்பி வருகின்றனர்.

Read more – சீன துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நிறுத்தம் : சீன- இந்திய எல்லை பிரச்சனை தான் இதற்கு காரணமா ?

இந்தநிலையில், நேற்று கி‌ஷான்கார் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா கலந்து கொண்டு பேசுகையில், இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை விவசாயிகளின் நிலத்தை ஒருபோதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிக்க முடியாது என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version