ஆந்திராவில் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தினை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்.
ஜெகன்மோகன் ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றது முதலே, விவசாயாம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், அந்த தொழில்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்க அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.
தனது அரசு விவசாயிகளுக்கானது என முன்னிலைப்படுத்தி வருகிறார். அவரது நலத்திட்டங்கள் மக்களிடையே, நல்ல வரவேற்பு பெற்றுள்ளதோடு, அண்டை மாநில மக்களிடையேயும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளன.
இந்நிலையில் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தினை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்துள்ளார்.
சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் சிறு குறு, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு போர்வெல் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான வாகனங்கள் இன்று கொடியசைத்து இயக்கி வைக்கப்பட்டன. ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெகன்மோகன் கலந்து கொண்டார்.
இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.