விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன், இல்லையெனில் எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை:

விவசாயிகளின் பிரச்சனைக்களை தீர்ப்பதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியினை அமல்படுத்த வேண்டும். என்றும், விவசாய செலவு மற்றும் விலை கமிஷனுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கிட வேண்டும் வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 14 ம் தேதி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை எழுதினார்.அந்த கடிதத்தில், விவசாயிகளின் பிரச்சனைக்களுக்காக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். மத்திய அரசு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வருகிறது. இதனால், மத்திய அரசின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது.

Read more – இன்றைய ராசிபலன் 29.12.2020!!!

மத்திய அரசு சார்பில் என்னிடம் ஒருமாத காலம் அவகாசம் கேட்டார்கள். அதற்குள் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். இதுவே என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே, விவசாயிகள் சார்பில் கடந்த 8 ம் தேதி நடத்தப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின்போது அன்னா ஹசாரே ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version