ஆண்டி என்று சொன்னதால் வந்த விபரீதம் துணிக்கடையில் நடந்த அடிதடி….

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி, ஒரு பெண்ணை ‘ஆண்டி’ என்று அழைத்ததால், பெண்கள் இணைந்து அந்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின், பாபுகஞ்ச் சந்தையில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவலின் படி, பாபுகஞ்ச் சந்தையில் நூற்றுக்கும் அதிகமானோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, குழுவாக வந்த பெண்களில் ஒருவரை அதே கடையில் பொருட்கள் வாங்க வந்த சிறுமிகளில் ஒருவர் “ஆண்டி” என்று அழைத்துள்ளார். எதற்காக அவர் அப்படி அழைத்தார் என்று அங்கு இருப்பவர்கள் யாருக்கும் தெரியவில்லை.

சிறுமி ஆண்டி என்று அழைத்த பெண் உடனே அந்த சிறுமியை கீழே பிடித்து தள்ளியும், முடியை பிடித்து இழுத்து அடித்தும் துன்புறுத்தியுள்ளார். சிறுமி அடிவாங்குவதை அவருடன் வந்த மற்றொரு சிறுமி தடுக்க முயன்றுள்ளார். இவர்களின் சண்டை பெரியதாக, இதை கவனித்த அருகே இருந்த பெண் காவலர் ஒருவர் இவர்களை சமாதானம் செய்கிறார். ஆனாலும் அவர்கள் அதை கேட்கவில்லை. ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ அங்கு இருக்கும் வாடிக்கையாளர் ஒருவரால் எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது தாக்கிய அந்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version