மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அசாம் ரைபிள்ஸின் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் மற்றும் 6 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர்.
வீரர்கள் 4 அசாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். சண்டேல் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் குழுவான மக்கள் விடுதலை இராணுவம் எனும் தீவிரவாத இயக்கத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எல்லையை ஒட்டிய பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது.
இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்
செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள தகவலில் தாக்குதல் நடத்தியவர்கள் முதலில் ஒரு ஐ.இ.டி குண்டுவெடிப்பை மேற்கொண்டனர் என்றும் பின்னர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
தீவிரவாத கும்பலை வேரறுக்க, தாக்குதல் நடந்த இடத்திற்கு 100 கிமீ தொலைவில் உள்ள இம்பாலில் இருந்து மேலதிக வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஏ.என்.ஐ மேலும் தெரிவித்துள்ளது.