மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் தீ விபத்து : 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் ஏற்பட தீடிர் தீ விபத்து காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

பண்டாரா :

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் அதிகாலை 2 மணியளவில் தீடிரென தீ பிடித்து பரவ தொடங்கியது. தீயானது முற்றிலும் பரவிய நிலையில் தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

Read more – இன்றைய ராசிபலன் 09.01.2021!!!

மேலும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version