டெல்லி, நேற்றைய முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி “ஆயுஷ்மான் பாரத்” எனும் திட்டத்தினை தொடங்கிவைத்தார். திட்டத்தின் நோக்கமே ஒவ்வொரு இந்தியரின் மருத்துவ தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்வது ஆகும்.
உதாரணமாக, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் சிகிச்சை எடுக்கிறார் என்றால் இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட டிஜிட்டல் அட்டையின் மூலம் ஏற்கனவே அவர் தமிழகத்தில் மேற்கொண்ட சிகிச்சை விவரங்களை டெல்லியில் உள்ள மருத்துவமனையால் அறிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட ஆண்டுக்குள் இந்த திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே பிரதமர் நேற்றைய தினம் மின்னணு தளத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் மக்கள் அனைவரும் சேர வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வெற்றியடைய செய்ய நாட்டு மக்கள் அனைவரும் சேர வேண்டும் எனவும், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் ஒரு புதிய புரட்சி இதன் மூலம் ஏற்படும் எனவும் நாட்டின் கடைகோடியில் வசிக்கும் மக்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் நல்ல சிகிச்சை கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
“ஆயுஸ்மான் பாரத்” திட்டத்தில் சேர நாட்டு மக்களுக்கு குடியரசு துணை தலைவர் வேண்டுகோள்.
டெல்லி, நேற்றைய முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி “ஆயுஷ்மான் பாரத்” எனும் திட்டத்திணை தொடங்கிவைத்தார். திட்டத்தின் நோக்கமே ஒவ்வொரு இந்தியரின் மருத்துவ தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்வது ஆகும்.