நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிடைப்பதில் சிக்கல் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
சென்னை :
வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதக் 15ம் தேதி காலை 9மணி வரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங், ஏடிஎம், யூபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிடைப்பதில் சிக்கல் இருக்குமென இந்தியன் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பான மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது.
இந்த தேதிகளில் வங்கியின் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் வங்கியுடன் இந்தியன் வங்கி இணைக்கும் திட்டம் 2020 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.