பா.ஜ.க விற்கு ஓட்டு போடுங்க கொரோனா தடுப்பூசி இலவசம்!!!

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

அதே போல் பல்வேறு கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்ட வண்ணம் உள்ளன அந்த வகையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பீகார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

பீகாரின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பீகாரில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

பீகாரின் கயா மற்றும் பாகல்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகின்றார்.

Exit mobile version