எல். கே. அத்வானி உள்பட பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல். கே. அத்வானி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்து விட்டன. 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி எட்டு தலைவர்கள் உட்பட நாற்பது பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு சிபிஐ இது ஒரு பெரிய சதி என்றும் பாபர் மசூதி மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, இந்த ஆண்டு, அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணையை முடித்த பின்னர், சிஆர்பிசியின் 313 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் அறிக்கைகளையும் பதிவு செய்ய நீதிமன்றம் ஜூன் 4 ஐ நிர்ணயித்தது. 

முன்னாள் துணைப் பிரதமர் எல். கே. அத்வானி, உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மற்றும் ப ஜா க தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், மற்றும் சாக்ஷி மகாராஜ் உட்பட 32 பேர் விசாரணையில் உள்ளனர்.

கடந்த ஜூலை ஆம் தேதி பா ஜா க மூத்த தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தனது அறிக்கையை பதிவு செய்தார். மசூதியை இடிக்கும் சதித்திட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் தனது பெயர் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எல்.கே.அத்வானி உட்பட 6 பேரை தவிர மற்ற அனைவரும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எஸ்.கே. யாதவ் வாசிக்க தொடங்கி உள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  எல்.கே.அத்வானிஉள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்

Exit mobile version