ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ கொரோனாவால் மரணமடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ கிரண் மகேஷ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு அரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை எம்.எல்.ஏ கிரண் மகேஷ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான உதய்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது.
பா.ஜ.க எம்.எல்.ஏ கிரண் மகேஷ்வரி மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.