5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவம்..10 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சம்பவம்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுளனர்.

​பஞ்சாபின் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக தீவிரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயற்சித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4:45 மணியளவில் பிகிவிந்த் நகரமான தால் எல்லையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

103 வது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறியும் அவர்கள் எல்லைக்குள் நுழைந்து உள்ளனர். வீரர்கள் தடுத்ததும் அவர்கள் துப்பக்கியால் சுடத்தொடங்கியதால், இந்தியவீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.  இதில் 5 தீவிரவாதிகளும் உயிரிழந்ததில்,
அவர்களிடமிருந்து 1 ஏ.கே ரக துப்பாக்கி மற்றும் 2 கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவல்காரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Exit mobile version