தெலங்கானா மாநிலத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையை கொன்ற சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, குடிபோதையில் இருந்த அவர் தன் மாமனாருடன் தகராறு செய்துவிட்டு கோவத்தில் தன் மகனையே கொலை செய்துள்ளார். 2 குழந்தைகளுக்கு தாயான பரமேஸ்வரியின் கணவர் இசைத்துறையைச் சார்ந்தவர். மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கண்டித்த பரமேஸ்வரி குடிக்கு அடிமையாகி இருந்தார்.
மாமனாரின் புகைப்பழக்கத்தைக் கண்டிக்க அவர் மருமகளின் குடிப்பழக்கத்தைக் கண்டிக்க இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் பரமேஸ்வரி. கொல்லப்பட்ட குழந்தையின் உடல் செவல்லா அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. கணவர் அளித்த புகாரின் பேரில் பரமேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.