அரசு அலுவலங்களில் பி.எஸ்.என்.எல் சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவு.
அரசு நிறுவனமான இயங்கி வரும் தொலைத்தொடர்புத்துறையான பிஎஸ்.என்.எல் நிறுவனம் கடுமையான நஷ்டத்தில் செல்வதாகவும் , இங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவே இதன் வருமானத்தில் பெரும் பங்கு போய்விடுவதால்கவும் செய்திகள் வெளியானது.
இதையடுத்து, இங்குப் பணியாற்றிவரும் ஊழியர்கள் வி.ஆர்.எஸில் செல்லுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு சில சலுகை அளிப்பதாக அறிவித்தது அரசு.
இந்நிலையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் நெட்வோர்க்களுக்குப் போட்டியாக பிஎஸ்.என்.எல் சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குக் கை கொடுக்கும் வகையில் மத்திய அரசு சில அறிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு மற்றும் பொதுத்துறை அலுவலங்களில் இனிமேல் BSNL மற்றும் MTNL சேவையை மட்டுமே பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, இணையம் , பிராட்பேண்ட், மற்றும் தரைவழிச் சேவை ஆகிய அனைத்து சேவைகளுக்கும் பி.எஸ்.என்.எல் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது.