பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து – 32 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து பாலத்தில் இருந்து கால்வாய்க்குள் விழுந்ததில் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சித்தி மாவட்டத்தில் இருந்து சத்னா நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ராம்பூர் பகுதியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்தது. தடுப்புகளை உடைத்துக் கொண்டு 30 அடி ஆழமுள்ள சாரதா கால்வாய்க்குள் பேருந்து விழுந்தது. பேருந்து தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே வெளியே எடுக்க முடிந்தது.

பேருந்தில் பயணித்த 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுனர் உள்பட 7 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்திருப்பது தெரியவந்தது.  இந்த விபத்து குறித்து அறிந்ததும் வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியையும் அவர் ரத்து செய்தார். அமைச்சர்கள் துளசி சிலாவத், ராம்கேலவான் படேல் ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு, மீட்பு பணிகளை முடக்கி விட்டனர்.

Exit mobile version