தூய்மை இந்தியா திட்டம் எப்படி நாடு முழுவதும் ஒரு இயக்கமாக மாறியதோ அதேபோல உள்ளூர் பொருட்களை வாங்குவதும் மாறவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லி, இன்று காலை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு இந்தியா திட்டத்தை பற்றி விரிவாக பேசினார்.குறிப்பாக முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கும் பொழுது இந்தியர்கள் அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை பார்ப்பார்கள்! ஆனால் தற்பொழுது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் பெருமையுடன் வாங்குகிறார்கள்.
எனினும் இந்திய மக்களின் உழைப்பில் உருவாகும் பொருட்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும். இன்னும் அதிக எண்ணிக்கையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்க நாம் முன் வரவேண்டும் குறிப்பாக தீபாவளி பண்டிகை நெருங்கிக் கூடிய நேரத்தில் இந்திய பொருட்களை வாங்க மக்கள் முயற்சிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வாறு நாம் நம் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமக்கு எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்ததோ! அதேபோல நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நமது தீபாவளியை மேலும் சிறப்படையச் செய்யும் எனவும் அவர் பேசினார்.