ஒரே ஒரு அறிவிப்பு.. சீனாவிற்கு ரூ.40 ஆயிரம் கோடி சுவாஹா..இந்தியா அதிரடி

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் சீன நிறுவனங்களுக்கு, தீபாவளி சீசனில் ரூ.4,0000 கோடி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், இந்திய 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு தடை விதித்து, வர்த்தக தொடர்புக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டது. அதைத்தொடர்ந்து, 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடந்த ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பால் சீன ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இந்த தீபாவளி சீசனில் ரூ .40,000 கோடி வணிக இழப்பை சந்திக்கக்கூடும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், ”தீபாவளி நேரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.70,000 கோடி அளவிலான வர்த்தகம் நடைபெறும். இதில் ரூ.40,000 கோடி மதிப்பிலான பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்திய மக்களுக்கு சீனா மீது பெரும் கோபமும் மனக்கசப்பும் நிலவுகிறது. இது சீன தயாரிப்புகளை புறக்கணிக்க மக்களைத் தூண்டியுள்ளது.

வர்த்தகர்கள் தங்களை போதுமான அளவு பொருட்களை உற்பத்தி செய்து வைத்துள்ளனர். குறிப்பாக மொபைல், எலக்ட்ரானிக்ஸ், மின் பொருட்கள், பொம்மைகள், வீட்டு அலங்காரங்கள், சமையலறை பாகங்கள், பரிசு பொருட்கள், கைக்கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், காலணி, அழகுசாதன பொருட்கள், அழகு பொருட்கள், எஃப்எம்சிஜி தயாரிப்புகள், நுகர்வோர் பொருட்கள், எழுதுபொருள், தீபாவளி பூஜை மற்றும் வீட்டிற்கான அலங்கார பொருட்கள் போன்றவை பெரிய அளவில் விற்க வாய்ப்புள்ளது.

தீபாவளி தொடர்பான பொருட்களைத் தயாரிக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து வருகிறோம். ஆன்லைனில் நடைபெறும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை சென்ற ஆண்டு அக்டோபரை விட இந்த அக்டோபரில் 70% விற்பனை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version