அழாதே என் அன்பை மட்டும் தெரிவியுங்கள் “ஏனென்றால் எங்கள் உயிர் என்றுமே நாட்டுக்காக மட்டும்தான் !!

என் உறவினரை விட என் நண்பரான தீபக் சாத்தே இல்லை என்று நம்புவது கடினம். தீபக் சாத்தேவின் உறவினர் நீலேஷ்  சாத்தே நெகிழ்ச்சி பதிவு!!

தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா…அதற்காக…

ஊர்தி, நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அனைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இதுதான் கடைசிப் பறத்தல் என்று, ஆனாலும் ஏறத்தாழ பத்து குழந்தைகள் உட்பட 180 சக பயணிகளைக் காப்பாற்றிய நிமமதியோடு, சிதைந்த காக்பிட்டின் நடுவே முதுகெலும்பு உடைந்து கிடந்தான். ஆனாலும், அவன் கம்பீரமாக இருந்தான்.தீபக் சாதே 36 வருட பறப்பு அனுபவம் கொண்டவன், தேசியப் பாதுகாப்பு மையத்தில் இருந்து வந்தவன், மதிப்பு மிக்க “வீரவாள்” விருது பெற்றவன், தேசிய வானுர்திப்படையில் 21 ஆண்டுகள் பணிறாற்றிய பிறகு ஏர் இந்தியாவின் வர்த்தக விமானியாக மாறினான்.

ஒரு வாரத்துக்கு முன்பு நான் அவனை அழைத்துப் பேசிய போது, அதே சிரிப்போடு பேசினான், நான் “வந்தே பாரத்” குறித்துக் கேட்டபோது, பெருமையாகவும், நிறைவாகவும் இருப்பதாகச் சொன்னான்.

உரையாடலின் போது நான் கேட்டேன்,

“தீபக், அரபு நாடுகள் இப்போது பயணிகளை அனுமதிப்பதில்லேயே?நீ காலி வானுர்திகளையா ஓட்டிச் செல்கிறாய்?”

அவன் சொன்னான்,

“நிலேஷ், நான், மலர்களையும், பழங்களையும், காய்கறிகளையும் அந்த நாட்டு மக்களுக்காகக் கொண்டு செல்கிறேன், ஒருபோதும் காலி விமானங்களோடு போவதில்லை.”

90 களின் துவக்கத்தில் ஒரு விபத்தின் போது கடுமையான தலைக்காயங்களோடு, இனி பிழைப்பது கடினம் என்று மருத்துவர்களே நினைத்திருந்த காலத்தில், பறப்பதன் மீதிருந்த காதலால், மீண்டு மறுபடி பறந்தான்.

நாக்பூரில் பிறந்த கலோனல் வசந்த் சாதேயின் மகனான தீபக் சாதே, தன் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுப் போய்விட்டான். சகோதரன் கேப்டன் விகாஸ், ஜம்முவில் விமானப்படையில் பணியாற்றி நாட்டுக்காக முன்னரே மரித்துப் போனவன்.

இந்த துயரான நேரத்தில் ஒரு படை வீரனின் கவிதை என் நினைவில் வருகிறது…..

“நான் போரில் இறந்து போனால், பெட்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்புங்கள்.

என் பதக்கங்களை என் நெஞ்சில் வைத்துவிட்டு அம்மாவிடம் சொல்லுங்கள், அவன் தன்னால் இயன்றதையும், சிறந்ததையும் இந்த நாட்டுக்காக செய்தானென்று…..

என் தந்தையின் முழங்கால்கள் என் முன்னால் மண்டியிட வேண்டாம், அவருக்கு இனி ஒருபோதும் நான் கவலையளிக்க மாட்டேன்.

என் தம்பியிடம் சொல்லுங்கள், நன்றாகப் படி என்று, என் பைக் சாவியை இனி நிரந்தரமாக அவனே வைத்துக் கொள்ளட்டும்.

என் தங்கையிடம் கவலையடையாதிருக்கச் சொல்லுங்கள், நாளைய உதயத்தின் கதிர்களாக அவளிடம் நான் சேர்ந்து கொள்வேன்…

என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள், “நான் ஒரு போர் வீரன், இறப்பதற்காகவே பிறந்தவன் என்று…..

Exit mobile version